இங்கி. ஆல்ரவுண்டர் பால் காலிங்வுட் ஓய்வு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விளையாட்டு
Paul Collingwood retire 14-09-2018

இங்கிலாந்து அணிக்காக 197 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிங்வுட், அந்த நாட்டுக்காக, அதிக, ஒரு நாள் போட்டிகளில் விளை யாடியுள்ள வீரர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் கேப்டனாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 68 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள காலிங்வுட் 4259 ரன்கள் எடுத்துள்ளார்.

197 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5092 ரன்கள் எடுத்துள்ள இவர், முதல் தர போட்டியில் (304 போட்டி) 16891 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 35 சதங்களும் அடங்கும். தற்போது நடைபெற்று வரும் கவுண்ட்டி சாம்பியன்ஸ்ஷிப் போட்டி இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதில் தர்ஹம் அணிக்காக அவர் ஆடிவருகிறார். ’இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் கடினமான, உணர்ச்சிபூர்வமான முடிவு. எனது கடைசி சக்தியை கூட கிரிக்கெட்டுக்காக செலவழித்தி ருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தர்ஹம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக என்னை அர்ப்பணித்தேன். அதற்காக கற்பனை செய்ய முடியாத சிறப்பை பெற்றேன். கிரிக்கெட் தாண்டிய எதிர்காலத்தை புதிய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து