ஆசிய கோப்பை:தனுஷ்கா குணதிலகா விலகல்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விளையாட்டு
Danushka Gunathilaka 14-09-2018

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்குகிறது. இந்த தொடருக்காக இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலகா இடம் பிடித்திருந்தார். இவர் முகுது வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த அவர் உடனடியாக இலங்கை திரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஷெஹன் ஜெயசூர்யா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரரான தினேஷ் சண்டிமல் கைவிரல் முறிவு காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து