முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பைக்கு முன் வீரர்களை மதிப்பிட ஆசிய கோப்பை போட்டி சரியான வாய்ப்பு: ரோகித்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்,உலகக் கோப்பைக்கு முன் வீரர்களை மதிப்பிட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சரியான வாய்ப்பாக அமையும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இலங்கை - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகப்பெரிய வாய்ப்பு....இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. முன்னதாக இந்திய அணியின் தற்காலிக கேப்டனான ரோகித் சர்மா கூறுகையில் ‘‘குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே சமீப காலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளோம். உலகக்கோப்பைக்கு முன் இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பு. வீரர்களின் செயல்பாட்டை மதிப்பிடவும், சரியான பேலன்ஸ் அணியை கண்டறியவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

எளிதாக இருக்காது...தனிப்பட்ட முறையில் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு அணியும் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் களம் இறங்கும். ஒவ்வொரு அணியும் தங்களது சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை கணக்கில் வைத்துதான் களம் இறங்கும். இந்த தொடர் எளிதாக இருக்காது. முதன்முறையாக ஒரு முழுத்தொடருக்கு கேப்டனாக செல்ல இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமாக உள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து