முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் வகுப்பில் உள்ளவர்கள் டி.வி. வைத்துக் கொள்ள முடியும் சிறைத்துறை விதிப்படியே கைதிகளுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன புழல் சிறை சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,முதல் வகுப்பில் உள்ளவர்கள் டி.வி. வைத்துக் கொள்ள முடியும். சிறைத்துறை விதிகளின்படியே கைதிகளுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக புழல் சிறை சம்பவம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் பிறந்த மாவட்டமான கடலூரியில் ரூ. 2,15 கோடியில் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் அறிவித்தபடியே கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதையும் முதல்வர் செய்து காட்டியுள்ளார்.
பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி விடுதலை செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்டத்தின் அடிப்படையில் கடிதம் அனுப்பிய போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கியது. அந்த தடையானையில் கலந்தாலேசிப்பது என்று உச்சநீதிமன்றம் ஒரு தெளிவுரை வழங்கியது. கலந்தாலோசிப்பது என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்று தெளிவுரை வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு போட்ட வழக்கை முடித்து வைத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது அவர் பரிந்துரை செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் காலதாமதம் இல்லாமல் 48 மணி நேரத்திற்க்குள் அமைச்சரவையை கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றி அது கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழக கவர்னர், சட்டத்திற்கு உட்பட்டு, உச்சநீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்ப்பின் அடிப்படையில் விரைவிலேயே நல்ல முடிவு எடுப்பார். கண்டிப்பாக நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம்.

புழல் சிறையிலே கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த புகைப்படத்தில் இருக்கின்ற கைதி போதை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலே 5 ஆண்டு காலமாக இருக்கிறார். அவருக்கு ஏ கிளாஸ் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு முதல் வகுப்பு அளிக்கவில்லை. நீதிமன்றத்தின் ஆணையின்படி அவருக்கு முதல் வகுப்பு அளிக்கப்பட்டு அரசு மற்றும் சிறைத் துறையின் விதிகளில் என்னவெல்லாம் அளிக்கலாம் என்று இருக்கிறதோ அவை அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையின் ஆடையை உடுத்தவில்லை. வேறு ஆடைகளை உடுத்தியுள்ளார் என்று ஊடகத்தில் செய்தி வந்தது. முதல் வகுப்பில் உள்ள சிறை கைதிகள் காலை 7:30 மணியில் இருந்து மாலை வரை வேலை நேரங்களில் மட்டும் சிறை சீருடையையும், மற்ற நேரங்களில் அவர்களது சொந்த உடையினை உடுத்திக் கொள்ளலாம் என்றும் விதி 228-ன் கீழ் உள்ளது

சிறை சுவர்களில் வர்ணம் பூசி கொள்ள அனுமதி உண்டு. அவர்களின் அறைகளில் பூசி கொள்ளலாம்.  சிறையில் முதல் வகுப்பாக இருந்தாலும் இரண்டாவது வகுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு தொலைக்காட்சி வசதி என்பது உள்ளது. மேலும், முதல் வகுப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வைத்துக் கொள்ளவும் முடியும். தற்போது குற்றச்சாட்டு எழுந்ததின் அடிப்படையில் ஏ. பிரிவில் இருந்த 18 தொலைகாட்சிகள் அவர்களின் அறைக்கு வெளியே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்போன் வைத்திருந்தது குற்றம்தான். இதற்கு சிறைவாசிகள் மட்டுமல்லசிறையில் பணிபுரிபவர்களும் உடந்தையாக உள்ளனர். இதுபோன்ற
சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் ஒரு செல்போன் கூட உள்ளே போகாத அளவிற்கு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு முதல்வரின் அறிவுரைபடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சிறைவாசிகள்  பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இவ்வாறு அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து