முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒஸாமா என அழைத்ததாக ஆஸி. வீரர் மீது மொயின் அலி புகார் விசாரணை நடத்த சி.ஏ. முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்,ஒஸாமா என ஆஸி. அணியின் வீரர் தன்னை அழைத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி எழுப்பிய புகார் குறித்து விசாரணை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியரான மொயின் அலி இங்கிலாந்து அணியில் பல ஆண்டுகளாக ஆல்ரவுண்டர் நிலையில் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது, கார்டிப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 77 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் மொயின்.இதுதொடர்பாக தான் எழுதவுள்ள சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மொயின் அலி, அது சிறந்த டெஸ்ட் ஆட்டமாக அமைந்தது. எனினும் மைதானத்தில் ஒரு ஆஸி. வீரர் தன்னை ஒஸாமா என அழைத்தார். இது எனக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. எனது சக வீரர்களிடம் இது தொடர்பாக தெரிவித்தேன். இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் இது தொடர்பாக ஆஸி. பயிற்சியாளர் லெமனிடம் எழுப்பி இருந்தார். லெமன் ஆஸி. வீரரிடம் கேட்ட போது தான் அவ்வாறு அழைக்கவில்லை என்றார். ஆனால் அது உண்மை எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சி.ஏ. வட்டாரங்கள் கூறியதாவது:-இப்பிரச்னை மிகவும் கடுமையானதாகும். தேசிய அணியில் பங்கேற்று ஆடுவோருக்கு என தெளிவான வழிகாட்டுதல்கள், நடத்தை விதிகள் உள்ளன. இதை நாங்கள் தீவிரமாக கருதி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் விவரங்களை கேட்டுள்ளோம் எனத் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து