முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 1.150மில்லி கிராமில் தங்கத்திலான இராட்டை உருவாக்கி சாதனை

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம் - ராஜபாளையத்தில் காந்திஜியின் நினைவை போற்றும் விதமாக 1.150மில்லி கிராமில் தங்கத்திலான இராட்டை உருவாக்கி சாதனை முயற்சி.
 ராஜபாளையம் சமுத்திரகனி,அம்பலபுளிபஜாரில்  நகை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த ஆண்டின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளை மிகச்சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.காந்தி ஜெயந்தி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்ற வேளையில் அவரை பெருமைப்படுத்தும் வகையில் போற்றும் வகையில் சுமார் 1.150மில்லி கிராமில் மிகச்சிறிய அளவில் தங்கத்திலான இராட்டை உருவாக்கி உள்ளார்.இதே போன்று இதற்கு முன் மினி உலகக்கோப்பை, தலைக்கவசம், மின்விசிறி, பொங்கல்பானை, தீபவிளக்கு கிருஸ்துமஸ் மரம்,  தேசிய கொடி, போன்றவற்றை மிகச்சிறிய அளவில் தங்கத்தில் வடிவமைத்துள்ளார்.நாட்டிற்கு சுதந்திரம் பெற்ற தந்த காந்திஜி சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி பொருட்களை நாட்டு மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என கூறினார்.அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்த இராட்டை உருவாக்கியதாக இதனை வடிவமைத்த சமுத்திரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து