இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
pakistan friendship india 2018 10 8

இஸ்லாமாபாத் : இந்தியாவுடன் நட்புறவையே விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதும் தெற்காசியா தொடர்பான தங்கள் நாட்டின் புதிய கொள்கையை வெளியிட்டார். அப்போது அவர், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், பாகிஸ்தானுக்கான நிதியுதவி நிறுத்தி வைப்பது தொடர்பான அறிவிப்புகளையும் அமெரிக்கா வெளியிட்டது. இதனால் அமெரிக்கா -பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, அமெரிக்காவில் அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமுது குரேஷி 10 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அவர் திரும்பினார்.

இந்நிலையில், முல்தானில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இந்தியாவுடன் நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. வறுமை, கல்வி, அணைகள் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு, அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதே நல்ல உபாயமாகும்.

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவில் அவ்வளவு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விட முடியாது. அமெரிக்கா -பாகிஸ்தான் இடையேயான உறவு சீராக முன்னேற்றம் கண்டு வருகிறது.

அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கும், ஓரே நாளில் தீர்வு கண்டு விடலாம் என்று எதிர்பார்ப்பது தவறாகும். பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா அல்லது ஆப்கானிஸ்தான் கண்ணோட்டங்களில் அமெரிக்கா காணக் கூடாது என்று குரேஷி தெரிவித்தார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து