ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      உலகம்
Nikki Haley 2018 10 10

நியூயார்க் : ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.

நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தில் உயர் பதவிகளில் இடம்பெற்றிருந்த ஒருவராகத் திகழ்ந்தார். இந்த நிலையில் ராஜினாமாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிக்கி ஹாலே பேசும் போது,

ஐக்கிய நாடுகள் சபையில் தினந்தோறும் அமெரிக்காவுக்காக வாதாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது நாட்டுக்காக நான் சண்டையிடும்போது எந்தத் தருணத்திலும் நான் பின்வாங்கவில்லை. இருப்பினும் இதுதான் நான் விடைபெறுவதற்கு சரியான தருணம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

நிக்கி ஹாலேவின் ராஜினாமவை அமெரிக்க அதிபர் ஏற்றுக் கொண்டதாகவும், இந்த முடிவை 6 மாதத்துக்கு முன்னரே நிக்கி அறிவித்ததாகவும் வெள்ளை மாளிகைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கி ஹாலே சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேறு பதவிக்குத் திரும்புவார் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினா கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான 44 வயது நிக்கி ஹாலே, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதர் போன்ற மேல்மட்ட நிர்வாக பதவிக்கு முதன் முறையாக தேர்வு செய்யப்பட்ட பெண்ணாக நிக்கி ஹாலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து