சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருகின்றனர்:அமித்ஷா வேதனை

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
Amit Shah 23-09-2018

போபால் : நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், இங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின், சிவ்புரி மாவட்டத்திலுள்ள போலோ மைதானத்தில், பா.ஜ.க. தொண்டர்களிடையே உரையாற்றிய பா.ஜ.க.தேசிய  தலைவர் அமித் ஷா கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டவிரோதமாகக் குடியேறிய 40 லட்சம் நபர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம், பா.ஜ.க. அரசு கண்டுபிடித்தது. அவர்கள் இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருகின்றனர். இது தெரியாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அப்பதிவேட்டுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று, நாட்டின் ஒற்றுமையையும், இளைஞர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, அந்த 40 லட்சம் நபர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று ராகுல் காந்தி பகல்கனவு கண்டு வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தொலைநோக்கியை வைத்துப் பார்த்தால் கூட, அவர்களால் வெற்றியைக் காண முடியாது. அவ்வளவு எட்ட முடியாத தூரத்தில் அவர்களுக்கான வெற்றி உள்ளது.

வறுமையைப் பற்றியே அறியாத முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொடுமைகளிலிருந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தை, கடந்த 15 ஆண்டுகளாக பாஜக காப்பாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து