முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பேருடன் விண்வெளிக்கு சென்ற ரஷ்ய ராக்கெட் நடுவானில் வெடித்தது - பாதுகாப்புடன் வீரர்கள் தப்பினர்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கஜகஸ்தான் : ரஷ்யாவை சேர்ந்த ராக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் போது நடுவானில் வெடித்து சிதறி உள்ளது.

ரஷ்ய ராக்கெட் ஒன்று நிக் ஹாக் என்ற அமெரிக்கரையும், அலெக்சி ஒவ்சினின் என்ற ரஷ்யரையும் சுமந்து கொண்டு விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நோக்கி சென்றது. ரஷ்யாவின் சோயுஸ் - ஏப்ஜி ராக்கெட்டின் உதவியுடன் கஜகஸ்தானில் உள்ள சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த இருவரும் விண்ணை நோக்கி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 50 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் வானில் வெடித்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ராக்கெட் வேகமாக பூமியை நோக்கி விழுந்துள்ளது.

ஆனால் ராக்கெட் வெடித்தவுடன், அதற்குள் இருந்த கேப்ஸ்யூல் வெளியானது. இந்த கேப்ஸ்யூலில்தான் இரண்டு வீரர்களும் இருந்தனர். இவர்கள் இதற்குள் பாதுகாப்பாக இருந்தனர். இதையடுத்து கேப்ஸ்யூல் வேகமாக பூமியை நோக்கி வந்தது. இது அனைத்து விதமான சேதங்களையும் தாங்குமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பூமிக்கு அருகில் வந்தவுடன் இந்த கேப்ஸ்யூலின் பாராசூட் திறந்தது. இதனால் இந்த கேப்ஸ்யூலின் வேகம் குறைந்தது. இதனால் அந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருவரும் தற்போது மருத்துவ பரிசோதனை முடிந்து நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ரஷ்யாவிற்கு பேரிடியாக முடிந்து இருக்கிறது. இதனால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோயுஸ் ராக்கெட்டுகளை கைவிட ரஷ்யா முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து