முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்கட்டி மழையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய பெண்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா குவின்ஸால்ந்து மாகாணத்தில் பியோனா சிம்ப்சன் என்ற பெண் தனது குழந்தை, மற்றும் அம்மாவை காரில் உட்கார வைத்து வெளியில் சென்று கொண்டிருந்தார்.

குழந்தையை பின்சீட்டில் பத்திரமாக அமர வைத்துக் கொண்டார். அப்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது. அதனால் காரை பியோனா தொடர்ந்து ஓட்டி சென்றார். ஆனால் நேரம் ஆக ஆக கடுமையான ஆலங்கட்டி மழை பொழிந்தது. காரை பியோனாவால் ஓட்டவே முடியவில்லை. அதனால் ரொம்பவே பயந்து போன அவர், வண்டியை ஓரங்கட்டினார். ஆனால் பலமாக கொட்டிய ஆலங்கட்டி மழை கார் கண்ணாடியையும் சுக்குநூறாக உடைத்து போட்டது.

காரின் கண்ணாடிகள் உடைந்து விட்டதால் ஆலங்கட்டி நேரிடையாக இவர்கள் மீது விழ தொடங்கியது. பின்சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பியோனா பின்சீட்டுக்கு தாவினார். குழந்தையை கெட்டியாக இறுக்கி அணைத்து கொண்டார். குழந்தையை சுற்றி உடலை கவசம்போல மூடி கொண்டார்.

எல்லா ஆலங்கட்டியும் பியோனாமேல் வந்து விழுந்தன. வலியால் துடித்தார் பியோனா. இதனால் உடலின் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மழை முடியும்வரை குழந்தை மீது ஒரே ஒரு ஆலங்கட்டி துளிக்கூட விழ விடவில்லை. பியோனா. மழை நின்ற பிறகு பத்திரமாக வீட்டுக்கு வந்தார்.

உடலில் ஏற்பட்ட காயங்களை பேஸ்புக்கில் புகைப்படங்களாக வெளியிட்டு, இந்த காயத்துக்கு ஏதாவது நல்ல மருந்து இருந்தா சொல்லுங்களேன் என்று கூறி தன் அனுபவத்தையும் பதிவிட்டார்.இதை ஏராளமானோர் பார்த்தும், படித்தும் நெகிழ்ந்து போய் விட்டார்கள். இவரை ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து