முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரபல பத்திரிக்கையாளர் ஹர்னித் கவுர், தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்ஜோஹ்ரியால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்த பெண் குறித்த கட்டுரையை பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிடாமல் இந்த பதிவு இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண், ராகுல் ஜோஹ்ரியுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ராகுல் ஜோஹ்ரி, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நிர்வாகக்குழு வெளியிட்ட அறிக்கையில், பி.சி.சி.ஐ. சி.இ.ஓ.வு.க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளைப் பெயர் வெளியிடாத ஒரு பெண் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் இதற்குமுன் பணியாற்றிய இடத்தில் இந்தச் செயலை செய்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கும், பி.சி.சி.ஐ.-யில் பணியாற்றுவதற்கும் தொடர்பில்லை.

அதே சமயம், இந்தக் குற்றச்சாட்டு குறித்து ராகுல் ஜோஹ்ரி முறைப்படியான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஒருவாரத்துக்குள் தன்னுடைய விளக்கத்தைக் கடிதம் மூலம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தைப் பார்த்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து