முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. சட்டசபை தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகளால் முக்கிய கட்சிகள் கலக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் திருநங்கைகளும் களம் இறங்கி போட்டியிட உள்ளனர். இதனால், அம்மாநில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருநங்கைகளை பொது வாழ்வில் இறக்கி முக்கியப் பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் மத்திய பிரதேச மாநிலம் பெயர் பெற்றது. இதன் தலைநகரான போபாலின் முதல் திருநங்கை எம்.எல்.ஏ.வாக 1998-ம் ஆண்டில் ஷப்னம் மவுசி என்பவர் சுஹாக்பூர் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.இதையடுத்து ம.பி.யின் கட்னி நகர மேயராக கமலா ஜான், நாட்டின் முதல் திருநங்கை மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாவது திருநங்கை மேயராக உ.பி.யின் கோரக்பூரில் போட்டியிட்டு ஆஷா தேவி என்பவர் 2000-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து உ.பி., பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் கட்சிகளை அதிர வைத்தனர். 2009-ல் மற்றொரு திருநங்கையான கமலா மபியின் சாகர் நகர மேயராகத் தேர்தெடுக்கப்பட்டார். கடைசியாக சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் நகர மேயராக மது நரேஷ் 2015-ம் ஆண்டில் வெற்றி பெற்றிருந்தார்.அதன் பிறகு வந்த சில ஆண்டுகள் அமைதி காத்தவர்கள் மீண்டும் ம.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக, அகில இந்திய திருநங்கைகள் சாதுக்கள் சபை அறிவித்துள்ளது. இந்த சபை கடந்த அக்டோபர் 2015-ல் புதிதாக அமைக்கப்பட்டது.மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முக்கிய மாவட்டங்களான போபால், ஜபல்பூர், இந்தோர், விதீஷா, கட்னி மற்றும் சிங்ரவுலி ஆகியவற்றின் தொகுதிகளில் திருநங்கைகள் போட்டியிட திட்டமிடுகின்றன. அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்குகளை சிதற அடித்து முடிவை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய பிரதேச மாநில தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் திருநங்கைகளின் போட்டியை எண்ணி கலக்கம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து