முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்க வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்துக்கு பதில் கூடுதல் நேரம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுத் மனு தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், அதை விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதிகள் சில தினங்களுக்கு முன் அளித்தனர்.

அதில், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், தீபாவளி அன்றும், இதர விழாக்காலங்களிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்துக்கு பதில் கூடுதல் நேரம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. காலை 4 மணி முதல் மாலை 6 மணிவரை பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என அந்த  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து