முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை இடைத் தேர்தல்: காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி வெற்றி - குமாரசாமி மனைவியும் வெற்றி

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பல்லாரி, மாண்டியா உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது.

மாண்டியா மக்களவைத் தொகுதியில் ம.ஜ.த. வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதி ம.ஜ.த-விடம் இருந்தது. ஏற்கனவே பா.ஜ.க. வசமிருந்த பல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2,43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளார்.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதி பா.ஜ.க. வசம் இருந்தது. ராம்நகர் சட்டசபை தொகுதியில், ம.ஜ.த. வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை, காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து