முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

திருப்போரூர் : சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால், விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 6) வெளியாகியுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சி இடம்பெற்றதால், விஜய் மற்றும் கலாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அரசை அவமதிக்கும் வகையிலான காட்சியாகும். எனவே இந்தப் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து