முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்டர்னி ஜெனரல் நீக்கம்: டிரம்ப் மீண்டும் அதிரடி

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ஜெஃபர்ஸன் செஷன்ஸை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்து நடைபெறும் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.செஷன்ஸுக்குப் பதிலாக தற்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள மாத்யூ விடேகர், குடியரசுக் கட்சியின் தீவிர அனுதாபி என்பதால், இந்த விசாரணையின் போக்கை டிரம்ப் கட்டுப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டிரம்ப்  வெளியிட்டுள்ள பதிவுகளில் :தற்போது அட்டர்னி ஜெனரலாக இருந்து வரும் ஜெஃபர்ஸன் செஷன்ஸுக்கு பதிலாக, அவரது தலைமை உதவி அதிகாரியாகப் பணியாற்றி வந்த மாத்யூ விடேகர் புதிய அட்டர்னி ஜெனரலாக தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார். அவர் நாட்டுக்கு சிறந்த சேவையளிப்பார்.இதுவரை அந்தப் பதவியை வகித்து வந்த ஜெஃபர்ஸன் செஷன்ஸுக்கு மிகுந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவிக்கு கூடிய விரைவில் நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தனது பதிவுகளில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.முன்னதாக, அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு தொடர்பான விசாரணையில் செஷன்ஸின் நடவடிக்கைகளை டிரம்ப் விமர்சித்து வந்தது நினைவுகூரத்தக்கது.செஷன்ஸ் நீக்கப்பட்டு மாத்யூ விடேகர் நியமிக்கப்பட்டுள்ளது, ரஷியத் தலையீடு குறித்து வெள்ளை மாளிகை சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் நடத்தி வரும் விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து