முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.267.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிதிட்டப் பணிகள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, - மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.267.85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அம்ரூட் பூங்காக்களை மாவட்ட  கலெக்டர் எஸ்.நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர், முன்னிலையில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.22 விராட்டிபத்தில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் 3480 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும், வார்டு எண்.21 ஹெச்.எம்.எஸ். காலனியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.47.43 லட்சம் மதிப்பீட்டில் 14800 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூங்காவினையும், வார்டு எண்.23 வி.கரிசல்குளம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் 3500 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.
மேலும் வார்டு எண்.27 விவேகானந்தர் நகரில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.39.92 லட்சம் மதிப்பீட்டில் 6900 சதுரடி பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும்,  வார்டு எண்.30 அண்ணாநகரில் ரூ.74.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும்  பொது மக்களின் பயன்பாட்டிற்காக வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். ஆக மொத்தம் ரூ.267.85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகளும், பிரசவ பார்த்திட தேவையான அனைத்து நவீன வசதிகளும், மருத்துவர் அறை, நோயாளிகள் வரவேற்பு அறை உள்ளிட்ட குடிநீர், கழிப்பிடம், பாதாள சாக்கடை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அம்ரூட் பூங்காக்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு சாதனங்கள், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள், இருக்கைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், நகரப் பொறியாளர் மதுரம், உதவி நகர்நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் முருகேச பாண்டியன், பழனிச்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேலு, சித்திரவேல், செயற்பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் சோனை, பாபு, வி.எஸ்.மணியன், பொன்மணி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து