முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் டிச. 11-ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிக்கை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலுங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது குறித்த அறிக்கையைத் தேர்தல் ஆணையம் நேற்று  வெளியிட்டது.

தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்பே சட்டப்பேரவையை கலைக்க கவர்னருக்கு பரிந்துரை செய்து முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க தயாரானார்.இதன்படி, ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அதோடு சேர்த்து தெலுங்கானாவுக்கும் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்து டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவித்தது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 7-ம் தேதி மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த முறைப்படியான அறிவிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (நேற்று) முதல் வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 20-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசிநாளாகும். டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் 2.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 32, ஆயிரத்து 574 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தேவைக்கு ஏற்ப இது அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து