முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் மற்றொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்று வானிலை ஆராய்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பி உள்ளது.

3,423 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச் சென்றது. உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இது பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நேற்று மாலை ஐந்து மணி 8 நிமிடத்துக்கு ஏவப்பட்டது.  இதற்கான கவுண்டவுன் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி 50 நிமிடத்திற்கு தொடங்கியது. 25 மணி 38 நிமிட கவுன்ட் டவுன் முடிந்ததும் விண்ணில் ஏவப்பட்டது .

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவி இருக்கிறது. 7 மாதங்களுக்கும் பின் இப்போதுதான் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

கஜா புயலால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் இருந்து வந்த நிலையில் , திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைகோள் நிறுத்தப்படும். இது 10 வருட ஆய்வு பணிகளை செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து