முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் இரு மாவோயிஸ்டுகள் கைது

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம்  இரு மாவோஸ்டுகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சந்தேகத்தற்குரிய இரு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் சட்டசபை  தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்றது. சுக்மா மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் மாவோஸ்டுகள் ஊடுருவல்கள் இருப்பதாக தகவல்கள் போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.

தேர்தலை முன்னிட்டு மாவோயிஸ்டுகளின் ஆதிக்கப் பகுதிகளுக்கு வந்துள்ள பாதுகாப்புப் படையினரை நக்சல்களின் படைக்குழு ஒன்று தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பாதுகாப்புப் படைகளுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படையினருக்கும் மாவட்ட ரிசர்வ் காவலர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மாலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இதில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டு இரு துப்பாக்கிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

மேலும், தர்பா பிரிவின் கங்கர்-பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தன. தகவல் அறிந்து அங்கு விரைந்த ரிசர்வ் போலீஸார் பேப்ரிகேடட் துப்பாக்கி, மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், மற்றும் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றை அங்கிருந்து கைப்பற்றினர்.

சந்தேகத்திற்குரிய இரு மாவோயிஸ்டுகளையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மஜிகுடா கிராமத்தில் நேற்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மத்திய ரிசர்வ் படையின் மூன்று காவலர்கள் குண்டடிபட்டு படுகாயமடைந்தனர்.

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலை முறியடிப்பதற்கான முகாந்திரமாகவே மாவோஸ்டுகளின் இச்செயல்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அவை தக்க நேரங்களில் முறியடிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து