முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல், நக்ஸல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது காங்கிரஸ்: உ.பி முதல்வர் யோகி தாக்கு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்கர் : ஊழல், நக்ஸலைட் தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநில சட்ட சபை 2ஆம் கட்ட தேர்தலையொட்டி, ராய்கரில்  நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சிக்காலத்தில் ஊழல், நக்ஸலைட் தீவிரவாதம் ஆகியவற்றை எப்போதும் ஊக்குவித்து வந்தது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், மாவோயிஸ்டு தீவிரவாதிகளை புரட்சிகாரர்கள் என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் உயிர் தியாகம் செய்த நமது பாதுகாப்புப் படையினரை அவர் இந்த கருத்தின் மூலம் அவமதிப்பு செய்துள்ளார்.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில், சமூகத்தில் மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுப்படுத்துகிறது. இதுதவிர, சமூகத்துக்கு அக்கட்சி எதையும் செய்யவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், சத்தீஸ்கரில் சுரங்க மாபியா, வன மாபியா, கால்நடை கடத்தல் கும்பல், நக்ஸலைட் தீவிரவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. ஆனால், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், இவை அனைத்துக்கும் முடிவு கட்டிவிட்டது.

இதற்கு முன்பு, டெல்லியிலிருந்து ரூ.100 நிதி விடுவிக்கப்பட்டால், மக்களின் கைகளுக்கு ரூ.10 மட்டுமே சென்றது. ஏனெனில், காங்கிரஸின் இடைத்தரகர்களால் ரூ.90 எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. பிரதமர் மோடியின் அரசால் மக்களுக்கு ரூ.100 விடுவிக்கப்பட்டால், அந்த முழுத் தொகையும் மக்களை சென்றடைகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமாக கருதப்பட்டது.

ஆனால் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், அவை அனைத்தும் வளர்ச்சியடைந்த மாநிலங்களாகி விட்டன. பிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கோஷத்துடன் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்றார் யோகி ஆதித்யநாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து