முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்த்தமற்ற வகையில் பேசுகிறார் மோடி:ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிரதமர் மோடியின் பேச்சில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது ஊழல் விவகாரம் குறித்து மோடி தொடர்ந்து பேசி வந்தார். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்றும், அவர்களது விளை பொருள்களுக்கு உரிய விலை பெற்றுத் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும்,வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்று கூறி வந்தார்.  இப்போது அவர் பிரதமராக உள்ள நிலையில், இதுபோன்ற விஷயங்களை அவர் பேசுவதில்லை. கடந்த தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. மோடியின் பேச்சுகளில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி இப்போது தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்காதது பெரிய பிரச்னையாக உள்ளது.மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்காக முதல்வர் தினமும் 18 மணி நேரம் உழைப்பார் என்று உறுதியளிக்கிறேன். வேலையின்மை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து