திருமலையில் இன்று மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசனம்

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018      ஆன்மிகம்
tirupathi 2018 8 12

திருப்பதி, திருமலையில் இன்று மூத்த குடிமக்களுக்கும், 28ஆம் தேதி கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி இன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசிப்பார்கள்.

அதைத் தொடர்ந்து, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து