உதகையில் 70 வருடங்களாக செயல்பட்டு வரும் மத்திய உருளை கிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      தமிழகம்
cm edapadi 2018 10 17

சென்னை : உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தென் மாநில விவசாயிகள் பாதிப்பு

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையம் 1957-ல் துவங்கப்பட்டது. இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது.

மூடக் கூடாது

உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது. ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து