முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் செயின்ட் ஜான்ஸ் கல்வி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி நல அலுவலர் எம்.அனிதா பேசியதாவது
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூய்மைக் கேட்டினை தவிர்ப்பதற்கான செயல்முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் ஏற்படும் காற்று மாசுபாடுகளை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர் தெய்வீகப்பிரியா பேசுகையில், நாம் சுவாசிக்கும் காற்று முற்றிலும் மாசுபட்ட சூழலில் நாம் சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளோம். நம் முன்னோர்கள் செய்த விவசாய முறைகளை கடைபிடிக்காமல் இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டினால் நம்முடைய மண் மற்றும் நீர் அதன் தன்மையை இழந்து மாசுபட்டு விட்டது. இதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தூய்மைக்காக நினைவூட்டும் முயற்சிகளை மற்றவவுடன் இணைந்து செயல்படுத்துவேன் என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு செயிண்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனர் ஜான் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஏ.இ.ஆர்.டி. நிறுவனர் தனராஜ் வரவேற்புரை ஆற்றினார். ஆரோக்கிய தாமஸ் முன்னிலை வகித்தார். பல்வேறு சமூக அமைப்புகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தன. முதல்வர் ஜெயந்தி நிறைவில் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து