முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்குகள் - வங்கி அலுவலக கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 8 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்குகள், 2 வங்கி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 2 உரக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதிய கிடங்குகள்... 

உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கூடுதலாக 84,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 39 புதிய கிடங்குகள் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1.8.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

தஞ்சாவூர் - வேலூர்

அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மனையேரிப்பட்டி கிராமத்தில், 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,500 மெட்ரிக் டன் மற்றும் ,1000 மெட்ரிக் டன் என மொத்தம் 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், வேலூர் மாவட்டம் - வாணியம்பாடி வட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார்.

விருதுநகர் - ஸ்ரீவில்லிபுத்தூர்

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேளுக்குறிச்சி கிளைக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் சீர்காழி கிளைக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம், திருவண்ணாமலை மாவட்டம் - வேங்கிக்கால் மற்றும் விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 உரக் கிடங்குகள் என மொத்தம் 8 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்குகள் 2 வங்கி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 2 உரக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து