முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சி திட்ட பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மதுரையில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மதுரையில் நேற்று ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு (2018-2019) தலைவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளை கருவாக கொண்டு இத்துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுப்பணித்துறையில் உள்ள நீர்நிலைகள், வரத்துக்கால்வாய்கள், தடுப்பணைகள், குடிமராமத்துப்பணிகள் போன்ற பணிகள் எந்தெந்த அளவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது எனவும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது மேலும் நிதி தேவைப்படுமாயின் இக்குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட வேண்டுமா எனவும் பொதுப்பணித்துறை,கட்டிடங்கள் மூலம் அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ள எண்ணிக்கைகள் மற்றும் நிலுவையிலுள்ளவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 மேலும் வேளாண்மைத்துறையில் தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் இனிமேல் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து எந்தெந்த வேலைகள் செய்யப்பட்டுள்ளது.அதன் நிலைப்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ளவை குறித்தும்ரூபவ் நிதி பற்றாக்குறை இருப்பின் அதற்கு பரிந்துரை செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட  கலெக்டர் நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர், குழு உறுப்பினர்கள் முனைவர்.க.பொன்முடி (திருக்கோவிலூர்), சி.வி.இராஜேந்திரன் (பர்கூர்),இ.கருணாநிதி (பல்லாவரம்),ஆர்.காந்தி (இராணிப்பேட்),  வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்),ப.சத்யா (பண்ருட்டி),எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு), அ.நடராஜன் (பல்லடம்),பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்),கே.மாணிக்கம் (சோழவந்தான்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி (மதுரை கிழக்கு), சட்டமன்ற செயலாளர் கே.சீனிவாசன், சட்டமன்ற துணைச்செயலாளர்கள் கே.எல்.சிவகுமரன், எஸ்.பாலகிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து