முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்: வெறிச்சோடிய பாரதிய ஜனதா அலுவலகம்!

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  மூன்று மாநில தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். பட்டாசுகளை வெடித்து, மேள தாளத்துடன் நடனமாடிய அவர்கள், வண்ணப் பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தெரிய வந்ததும் ஏராளமான தொண்டர்கள் காங்கிரஸ் கொடியுடன் கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டும் வகையில், ராகுல் காந்தி வாழ்க என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அப்பகுதியில் குழுமியிருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.

ராகுல் காந்தியை வாழ்த்தும் வகையில் ஏராளமான பதாகைகள் அப்பகுதியில் நிறுவப்பட்டன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவ்ஜோத் சிங் சித்து, பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்களும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது சித்து பேசுகையில்,

தேர்தலுக்கு தயாரானது, பிரசாரம் செய்வது உள்ளிட்டவற்றில் ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தார். அலையில் தத்தளிக்கும் கப்பலை வழிநடத்துவதைப் போல மிக இக்கட்டான சூழலில் வந்தவர் ராகுல் காந்தி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து