முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய கேரள சிறுவன்

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன் ராஜேஷ். 13 வயது மாணவனான இவர் தனது 9-வது வயதில் இருக்கும் போது செல்போன் செயலி ஒன்றை உருவாக்கினார். பொழுதுபோக்காக இவர் உருவாக்கிய செயலி மிகவும் பிரபலமடைந்தது. மேலும் இணையதள வடிவமைப்பு, லோகோக்கள் வடிவமைப்பிலும் ஆதித்யன் ஆர்வம் காட்டினார்.

5 வயதாக இருந்த போதே கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டிய ஆதித்யன் ராஜேஷ், தனது 13 வது வயதில் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உரிமையாளராகியிருக்கிறார். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துபாயில் இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்று கலீஜ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட் டுள்ளது. இதுகுறித்து ஆதித்யன் ராஜேஷ் கூறும் போது,

இணைய தளம் மூலம் டைப்பிங் செய்வதை கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் கம்ப்யூட்டர், இணைய தளம், வடிவமைப்பில் எனது ஆர்வத்தைப் பெருக்கிக் கொண் டேன். தற்போது 12 வாடிக்கையாளர்களுடன் எங்களது நிறுவனம் இயங்கி வருகிறது. அவர்களுக்கு டிசைன், கோடிங் சேவைகளை தற்போது இலவசமாக வழங்கி வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து