முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு அடுத்த அடி.. அடுத்த 2 டெஸ்டிலும் பிரித்வி ஷா இல்லை!

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என ஐசிசி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் அணியில் இருந்து விலகிய தொடக்கவீரர் பிரித்வி ஷா, 3-வது டெஸ்டில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த 2 டெஸ்டிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணுக்கால் காயம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்னோட்டமாக, ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டங்கள் நடந்தன. பயிற்சிப் போட்டியில் பவுண்டரி கோட்டிற்கு அருகில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது கணுக்கால் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இணையதளத்தில்...

இரண்டாவது டெஸ்டிலும் பிரித்வி ஷா சேர்க்கப்படாத நிலையில், ‘பாக்சிங் டே’ டிசம்பர் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்க இருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என ஐசிசி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவாக...

பிரித்வி ஷாவுக்கு பதிலாக மயங் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அவர், ஆஸ்திரேலியாவில் அறிமுக டெஸ்ட் தொடரில் களம் காண உள்ளார். இருப்பினும், பிரித்வி ஷா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து