முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிமலை சீற்றம் எதிரொலி: இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது 200 பேர் பலியான பரிதாபம்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கரீட்டா : இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பினால் 200-க்கும் அதிகமானோர் பலியானார்கள். அங்கு சுனாமி ஏற்படுவது தொடர்கதையாகவே மாறி விட்டது. 
இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 200-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 745 பேர் காயமடைந்து உள்ளனர். 30 பேரை காணவில்லை. ஜாவாவின் மேற்கு முனை பகுதியில் 33 பேர் பலியாகி உள்ளனர். செராங்கின் வடக்கே 3 பேரும், தெற்கு லாம்பங்கில் 7 பேரும் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

வீடுகள் சேதம்

இந்த சுனாமியால் 430-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அனாக் கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகள் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அனாக் கிரகட்டோவா எரிமலையானது கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டே இருந்தது. இதில் இருந்து பல ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு வானை நோக்கி சாம்பல் புகையானது பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்கதை

இந்தோனேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர சுனாமி பல நாடுகளை தாக்கியது. தமிழகத்திலும் அப்போது சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது நினைவிருக்கலாம். நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கடலில் இழுத்து செல்லப்பட்டு ஜலசமாதி ஆனார்கள். சென்னையிலும் அப்போது சுனாமி ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இங்கு சுனாமி ஏற்படுவது ஒரு தொடர்கதையாகவே மாறி விட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து