முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் குழந்தை போல நடை பழகும் வீடியோ வைரல்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க், நீண்ட நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர், புதிதாக பிறந்த குழந்தை போல நடை பழகும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்கவின் நாசா விண்வெளி வீரர் ட்ரூ பைஸ்டல், 197 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழுவினருடன் மே மாதம் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார். அவர் தனது முன்னாள் குடியிருப்பு இல்லமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி நடைபயிற்சி மேற்கொண்டார். விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், ட்ரூவிற்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட பின்னர், நடைபழக அங்கிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் உதவுகின்றனர். அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்ரூவின் மனைவி இந்திரா, சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்கள் நலமாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து