முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் ராமநாதபுரம் கலெக்;டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இரத்த வங்கியின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 1000 முதல் 1500 வரையிலான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இம்மருத்துவமனையில், பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை, விபத்து போன்ற  அவசர கால சூழ்நிலையில் தேவைப்படும் ரத்தத்தினை வழங்கிட ஏதுவாக 600 யூனிட் சேமிப்பு வசதி கொண்ட ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது.  இந்த ரத்த வங்கியின் செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 இந்த ஆய்வின் அடிப்படையில், தற்போது 66 யூனிட் ரத்தம் சேமிப்பில் உள்ளது.  ரத்த வங்கியில் பராமரிக்கப்பட்டு வரும் ரத்ததானம் செய்பவர் குறித்த பதிவேடு, ரத்த தானம் பெறப்பட்ட நாள், ரத்த வகை ஆகிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, ரத்தத்தில் நோய் தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ததற்கான பதிவேடு, அவசர தேவையின் அடிப்படையில் இரத்த வங்கியிலிருந்து சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரத்தம், நோயாளி குறித்த பதிவேடு என அனைத்து பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.  இந்த ரத்த வங்கியில், அனைத்து பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்பட்டு, ரத்த வங்கியின் செயல்பாடு தொடர்பான அனைத்து சீர்மரபுகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. ரத்த வங்கிகளின் மூலமாக இரத்த தானம் பெறும்போதும், தேவையின் அடிப்படையில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கும்போதும் உரிய சீர்மரபுகளை பின்பற்றி விழிப்புடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்திடவும் தொடர்ந்து கண்காணித்திடவும் மருத்துவப்பணிகளின் இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது, மருத்துவப்பணிகளின் இணை இயக்குநர் மரு.முல்லைக்கொடி, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜவஹர்லால் உட்பட ரத்த வங்கி பணியாளர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து