முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் வெற்றி சிட்னியிலும் தொடரும்: கோலி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : எங்களுடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது, இந்த வெற்றி இதோடும் முடித்துக் கொள்ளப் போவதில்லை. சிட்னியிலும் எங்கள் வெற்றி தொடரும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 40 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்றுமுன்னிலை வகிக்கிறது இந்திய அணி. சிட்னியில் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அடுத்து நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் இந்த வெற்றியோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. இந்த வெற்றி எங்களுக்கு அதிகமான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி சிட்னியிலும் தொடரும். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். அதனால்தான் நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துள்ளோம். இதைத் தொடரவே விரும்புகிறோம்.

3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து அதிகமான விக்கெட்டுகளை ஒரு ஆண்டில் அணிக்காக வீழ்த்தி இருக்கிறார்கள். கூட்டாக இருந்து இவர்கள் சிறப்பாக பந்து வீசுவதைப் பார்க்கும் போது, கேப்டனாக நான் பெருமைப்படுகிறேன். எங்களுடைய முதல்தரமான கிரிக்கெட் அமர்க்களமாக இருக்கிறது. அதனால்தான் இந்தப் போட்டியில் வென்றோம். இந்தியாவில் முதல் தரமான வசதிகளும், அதற்கான வாய்ப்புகளும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இருந்ததால், வெளிநாடுகளில் சிறப்பாக பங்களிப்பு செய்ய முடிகிறது. மயங்க் அகர்வால் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். புஜாரா எப்போதுமே சிறப்பு, புஜாராவுடன் இணைந்து அதிகமான ரன் அடிக்க நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் விஹாரி நீண்டநேரம் நிலைத்து ஆடி, நம்பிக்கையூட்டியுள்ளார். ரோஹித் சர்மாவும் பங்களிப்பு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் இந்திய கேப்டன் நானாக இருப்பேனா என்பது தெரியாது. நேர்மையாகப் பதிலும் அளிக்க இயலாது. கடைசி டெஸ்ட் போட்டியில் எங்கள் வெற்றியை எதுவும் தடை செய்ய முடியாது. இவ்வாறு கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து