முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக நான்ஸி பெலோசி மீண்டும் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக நான்ஸி பெலோசி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நான்ஸிபெலோசி கடந்த 2007-2011 ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். இவரே முதல் பெண் சபாநாயகர் என பெருமையையும் பெற்றார். இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் பெலோசி வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் நடந்த ஒட்டெடுப்பில் மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் பெலோசிக்கு 220 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் மெகார்தேவுக்கு 192 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து மீண்டும் சபாநாயகராக பெலோசி பதவியேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து