முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையையொட்டி ஆவின் நெய்க்கு சிறப்பு தள்ளுபடி

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முதல் ஆவின் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் வாடிக்கையாளர்கள் வாங்கும் நெய்க்கு நேற்று முதல் 18-ம்  தேதி வரை சிறப்பு தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.20 தள்ளுபடியும், 500 மில்லி லிட்டர் நெய் ரூ.10 தள்ளுபடியும், 200 மில்லி லிட்டர் நெய் ரூ. 5 தள்ளுபடியும், 100 மில்லி லிட்டர் நெய் ரூ.3 தள்ளுபடியும், 5 லிட்டர் நெய் ரூ.100 தள்ளுபடியும், 15 கிலோ நெய் ரூ.300 தள்ளுபடியில் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் தரமான ஆவின் நெய்யை தள்ளுபடி விலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆவின் பாலகங்களில் வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து