முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பன்றிக் காய்ச்சல் காரணமாக அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பா.ஜ.க. தேசிய தலைவா் அமித்ஷா கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையை அணுகி தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல் சோா்வு ஏற்பட்டிருந்ததைத் தொடா்ந்து அவரது ரத்தத்தை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். பரிசோதனை முடிவில் அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அமித்ஷா கடந்த 16-ம் தேதி இரவு 9 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தற்போது குணமடைந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டாக்டர்கள் அவரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து