முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி: நியூசிலாந்து அணியில் ஜிம்மி நீஷம், டாட் ஆஸ்ட்லே சேர்ப்பு

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள நியூசிலாந்து ஜிம்மி நீஷம், டாட் ஆஸ்ட்லே ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது.

இஷ் சோதி நீக்கம்...

நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் டக் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாட் ஆஸ்ட்லே, 3. டிரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மார்ட்டின் கப்தில், 7. மேத் ஹென்ரி, 8. டாம் லாதம், 9. கொலின் முன்ரோ, 10. ஜிம்மி நீஷம், 11. ஹென்ரி நிக்கோல்ஸ், 12. மிட்செல் சான்ட்னெர், 13. ராஸ் டெய்லர், 14. டிம் சவுத்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து