முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு - மம்தாவுக்கு ரவிசங்கர் பிரசாத் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மேற்கு வங்காளத்தில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம்...

மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு தினார் மாவட்டத்தில் உள்ள பலுர்கட் பகுதியில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவரது ஹெலிகாப்டர் இங்கு தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. பலுர்கட் பகுதியில் யோகி ஆதித்யாநாத் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் நேற்று காலை முதல் திரளத் தொடங்கினர். ஹெலிபேட் கிடைக்காததால் தனது பயணத்தை ரத்து செய்த யோகி ஆதித்யாநாத், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து தொலைபேசி மூலம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ரவிசங்கர் பிரசாத்...

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் உ.பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்ததற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் இறங்க அனுமதி தரவில்லை. மேற்கு வங்காள காவல்துறை மற்றும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்க மம்தா முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து