பிரபல தெலுங்கு நடிகரின் கட்சியில் இணைந்தார் ராமமோகன ராவ்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Ramakrishna Rao telungu actor party 2019 02 12

விஜயவாடா : தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை செயலாளராக இருந்தவர் ராமமோகன ராவ். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில்,  ஜெயலலிதாவின் திறமையை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன். ஜெயலலிதா ஒரு அரசியல்வாதியின் இதயம் மக்களுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். பவன் கல்யாண் அதே போல் தான் என்று நினைக்கிறேன். அவர் ஒரு நட்சத்திரம் என்றாலும், அவர் ஒரு மனிதனின் மனிதர், நான் மேடத்திடம் பணியாற்றியது போலவே பவனுடன் இருப்பேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து