முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் பாக்.கிற்கு எதிராக இந்தியர்கள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் :  புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள், பாகிஸ்தான் ஒழிக, வந்தே மாதரம், காஷ்மீர் எங்களுடையதே, இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்பன போன்ற முழக்கங்களை எழுப்பினர். பலர் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்க எதுவும் செய்யாத பிரிட்டன் அரசை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

பிரிட்டன் அரசியல்வாதிகள் சிலர் பயங்கரவாதிகளுக்கு இரக்கம் காட்டுகிறார்கள். இந்தியா நிர்வாகிக்கும் காஷ்மீர் என கூறி வருகிறார்கள். அதனை ஏற்க முடியாது. காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம் தான் . நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறோம். இது இந்து -முஸ்லிம் பிரச்னை அல்ல. வீரமரணம் அடைந்த வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் உயிர் தியாகம் செய்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருகிறான். அவன் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா ஒன்றும் கோழையல்ல. இதற்கு இந்திய அரசு கண்டிப்பாக உரிய பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புகிறோம். பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும்படி பாகிஸ்தானுக்கு பிரிட்டன் அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து