முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : வங்காளதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து.

ஒயிட் வாஷ்

நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது. இதற்கு முன் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 4-1 எனத் தொடரை கைப்பற்றியது. இதனால் ஐசிசி தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியது.

112 புள்ளிகளுடன்...

தற்போது வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்ததால் 112 புள்ளிகளுடன் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து