முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எத்தியோப்பியா விபத்து எதிரொலி: சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரும் போயிங் விமானங்களுக்கு தடை

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியாவை தொடர்ந்து சிங்கப்பூரும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டு சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 157 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதே ரக விமானம் தான், கடந்த அக்டோபர் 29-ம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், தொடர் விபத்துகளை தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வான் வழியாக இந்த வகை விமானங்கள் செல்வதற்கும் சிங்கப்பூர் தடை விதித்துள்ளது என ஐ.ஏ.என்.எஸ் .செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள்  போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து