மோசமான நிலைமைகளில் டோனி போன்ற வீரர் தேவை - ஷேன் வார்ன்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      விளையாட்டு
shane warne 2019 03 14

மெல்போர்ன் : டோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

பயிற்சியில் மும்மூரம்...

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

டோனி இல்லாததே...

இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைய அணியில் டோனி இல்லாததே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிதற்றுபவர்கள்...

இந்நிலையில் டோனி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என கூறியுள்ளார்.

முக்கியமானது...

மேலும் தெரிவித்துள்ள அவர், ஆட்டத்தில் நி‌லைமை மோசமாக செல்லும் போது டோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணி‌யில் இருப்பது அவசியம். டோனியின் அனுபவமும், ஆட்டத்தை சரியாக கணிக்கும் அவருடைய தலைமை அனுபவங்களும் உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியாவுக்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

நல்லதொரு புரிதல்...

முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் , வாழ்வா சாவா என்ற நேரங்களில் டோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. டோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து