முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதி ம,தி,மு,க,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அ. கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19-ம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து