முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்ட எரிவாயு குழி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

துர்க்மெனிஸ்தான் : துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப்பெரிய எரிவாயுக் குழி முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

காரகும் பாலைவனத்தில் காணப்படும் இந்த நெருப்புக்கு குழி இயற்கையாக உருவான ஒன்றாகும் சுமார் 70 மீட்டர் சுற்றளவும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நெருப்புக்கு குழியின் வெப்பநிலை சுமார் 1000 டிகிரி செல்சியஸ் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த குழிக்கு நரகத்தின் கதவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நெருப்பு குழியின் முழு அளவையும் பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அதனை படம் பிடித்துள்ளனர். ஆங்காங்கே பற்றி எரியும் பாறைகளும் மற்றும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பும் என அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து