முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார். அதை தொடர்ந்து முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ம் தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.

இன்று மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று நடக்கும் இந்த கூட்டத்தில் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து