முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ல் பதவிறக்கம் செய்யலாம்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் வரும் மே மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டை வரும் ஏப்ரல் 15-ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ஜூன் 5-ல் முடிவு

நீட் தேர்வு ‌முடிவுகள் வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும்.‌  தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து