முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இலங்கை

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் பாகிஸ்தான் ஜூனியர் கிரிக்கெட் அணி விளையாடவிருந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தீவிரவாத தாக்குதல்...

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் ரத்து...

வெடிகுண்டு தாக்குதல்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

5 நாட்களாக...

19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3-ம் தேதி தொடங்கவிருந்தது. இதற்காக கடந்த 5 நாட்களாக கராச்சி முகாமில் தீவிர பயிற்சி பெற்ற பாகிஸ்தான் அணி, வரும் 30-ம் தேதி இலங்கைக்கு புறப்படுவதாக இருந்தது.

சுற்றுப்பயணம்...

ஆனால், தற்போதைய சூழ்நிலையில், போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், இந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஜூன்- ஜூலை மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து